விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை!
ADDED : 663 days ago
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'டிரெயின்'. சமீபத்தில் இந்த படத்தை பூஜை விழா உடன் அறிவித்தனர்.
தற்போது சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை டிம்பிள் ஹயாத்தி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அட்ராங்கி ரே, வீரமே வாகை சூடும், கில்லாடி ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.