உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சலார்' குழுவுக்கு சம்மதம் சொல்வாரா ராஜமவுலி?

'சலார்' குழுவுக்கு சம்மதம் சொல்வாரா ராஜமவுலி?

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'சலார்' படம் அடுத்த வாரம் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக எந்தவிதமான புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறாததே அதற்குக் காரணம் என்பதால்தான் இந்த முடிவு என்கிறார்கள்.

இதனிடையே, வீடியோ பேட்டிகளை மட்டும் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்காக தற்போதைய பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலியை அணுகியுள்ளார்களாம். 'சலார்' படக்குழுவினரை ராஜமவுலி பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டுள்ளார்களாம். இதற்கு ராஜமவுலி சம்மதம் சொல்வாரா என்பது இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அவர் சம்மதித்தால் அதை மட்டுமே வைத்து படத்தின் புரமோஷனை முடித்துக் கொள்ள திட்டமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !