டிச.,22க்கு தள்ளிப்போன 'சபாநாயகன்'
ADDED : 708 days ago
நாளை டிசம்பர் 15ம் தேதி “அகோரி, ஆலம்பனா, பைட் கிளப், கண்ணகி, பாட்டி சொல்லை தட்டாதே, சபாநாயகன், ஸ்ரீ சபரி ஐயப்பன், தீதும் சூதும்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. கணவன், மனைவியான அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரது படங்களும் நாளைய வெளியீட்டில் போட்டியிட இருந்தன.
அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த 'சபாநாயகன்', கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்த 'கண்ணகி' ஆகிய படங்கள் வெளியாக இருந்த நிலையில் 'சபாநாயகன்' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 22ம் தேதி வெளியாகும் என அசோக் செல்வன் அறிவித்துள்ளார்.
இருப்பினும் நாளை வெளியாக உள்ள படங்களின் பட்டியலில் 'விவேசினி' என்ற படம் சேர்ந்துள்ளது. அதனால் நாளை வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதே 8ல் தான் உள்ளது.