மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
657 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
657 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68 வது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் சித்தார்த் நுனி. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் அனிமல் ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், அதை பார்த்ததும், தான் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த அனிமல் படத்தை பார்த்ததும் எனக்கு எந்தவித இன்ஸ்பிரேசனும் ஏற்படவில்லை. ஆணாதிக்க மனநிலை ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. அதோடு இப்படத்தின் கடைசி காட்சியில் மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சி அசிங்கமாக இருக்கிறது. என்னதான் இப்படம் வசூலில் சாதனை செய்தாலும் இது ஒரு மோசமான படம். அதோடு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட பிறகும் குழந்தைகளுடன் அனைவரும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வது கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாத இந்த படத்தை பார்ப்பதற்கு எப்படி குழந்தைகளை அனுமதிக்கிறார்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி.
657 days ago
657 days ago