வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
ADDED : 657 days ago
எட்டு தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி தற்போது நாயகனாக நடித்து வரும் படம் ஆலன். அவருக்கு ஜோடியாக ஜெர்மனியை சேர்ந்த தபேயா மதுரா என்பவர் நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம், கொடைக்கானல் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை அடுத்து இந்த ஆலன் டத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.