உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛டிமான்டி காலனி 2' படத்தின் டிரைலர் அப்டேட்

‛டிமான்டி காலனி 2' படத்தின் டிரைலர் அப்டேட்

கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த 'டிமான்டி காலனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை' அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கியுள்ளார்.

இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார்,அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் டிரைலர் வருகின்ற டிசம்பர் 16ந் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !