துபாயில் ‛போட்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா
ADDED : 658 days ago
இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற வித்தியாசமான பேண்டஸி கதை களங்கள் கொண்ட படங்களை இயக்கியவர் சிம்பு தேவன் . தற்போது 'போட்' என்கிற படகில் நடக்கும் படத்தை உருவாக்கியுள்ளார்.
இதில் யோகி பாபு, கவுரி கிஷன் முதன்மைத் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . மாலி மற்றும் மான்வி மற்றும் சிம்பு தேவன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி துபாயில் உள்ள ஸ்டார் சினிமா என்கிற இடத்தில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.