உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி?

நடிகர் நானி கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இவர் டான் பட இயக்குனரிடம் கதை கேட்டிருந்தார் ஆனால், அதன் பட்ஜெட் ரூ. 100 கோடியை கடந்ததால் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் சமீபத்தில் நானி கதை கேட்டுள்ளார். இந்த கதை அவருக்கு பிடித்து போனதால் இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறுகின்றனர். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !