தனுஷ் 50வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 758 days ago
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதன் கதைகளம் வடசென்னை பகுதியைக் சுற்றி என்பதால் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை ஈ.சி.ஆர்-ல் வடசென்னையை பிரமாண்டமான அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் தனுஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எனது 50வது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படக்குழுவினர்களுக்கு மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.