உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் படத்திற்கு மூன்று பாடல்கள் ரெடி - ஜி.வி. பிரகாஷ்

தனுஷ் படத்திற்கு மூன்று பாடல்கள் ரெடி - ஜி.வி. பிரகாஷ்

நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக தனது அக்கா மகனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் இந்த படத்தை தனுஷ் இயக்குகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என சமீபத்தில் அவரே கூறினார்.
கூடுதலாக சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, தனுஷ் இயக்கும் புதிய படத்திற்கு நான் இசையமைக்கிறேன். இது ஒரு லவ் படம் என்பதால் மூன்று பாடல்கள் இதுவரை இசையமைத்துள்ளோம். இதில் தனுஷ் நடிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !