ஆஸ்கர் போட்டியில் குதித்த இன்னொரு மலையாள படம்
96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான '2018' அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்த படம் 2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பின்போது நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாகி இருந்தது.
கடந்த ஆஸ்கர் விருதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பாடல்கள் 'சிறந்த அசல் பாடல்' பிரிவுக்கு போட்டியிட்டது. அதில் 'நாட்டு நாட்டு' பாடல் விருதை தட்டிச் சென்றது. அதேபோல இந்த ஆண்டு அதேபிரிவில் வின்சி அலோஷியஸ் நடிப்பில் வெளியான 'தி பேஸ் ஆப் தி பேஸ்லஸ்' மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் ஆஸ்கர் விருதின் 'சிறந்த அசல் பாடல்' பிரிவுக்கான தகுதிச் சுற்று பட்டியலில் தேர்வாகியுள்ளது. இந்தப் படத்தை ஷைசன் பி ஓசெப் இயக்கியுள்ளார். அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்துள்ளார்.