பொங்கல் ரேஸிலிருந்து பின் வாங்குகிறதா லால் சலாம்?
ADDED : 655 days ago
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரப்போகிற பொங்கல் தினத்தில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக, ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் படம் பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு ஜனவரி 26ம் தேதி வெளியாக இருந்த தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தேதியில் லால் சலாம் படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.