‛லெஜெண்ட்' சரவணனை இயக்கும் துரை செந்தில்குமார்
ADDED : 701 days ago
தனுஷ் நடித்த கொடி, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரியை வைத்து ‛கருடன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்து இவர் லெஜெண்ட் படத்தில் நடித்த அருள் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லெஜண்ட் படம் திரைக்கு வந்தபின் சரியான கதைகளை தேடி வருவதாக கூறிவந்த சரவணனுக்கு, துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறாராம். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.