இரண்டு நாட்களில் ரூ.103 கோடி வசூலைக் கடந்த டங்கி
ADDED : 930 days ago
ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த திரைப்படம் 'டங்கி'. இதில் டாப்சி, விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.103.4 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இந்த வருடத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த பதான், ஜவான் படங்களின் வசூலை விட இப்படத்தின் வசூல் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.