உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 3 தமிழ் படங்கள்!

புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 3 தமிழ் படங்கள்!

சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக புனேயில் 22வது சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரையிடுவதற்கு, விஜய் சேதுபதி - சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளியான விடுதலை மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் - காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள ‛இடி முழக்கம்', ஜெயப்பிரகாஷ் - ரோகினி நடித்துள்ள ‛காதல் என்பது பொதுவுடமை' ஆகிய மூன்று படங்களும் தமிழ் சினிமாவிலிருந்து தேர்வாகி உள்ளன. மேலும், மலையாளத்தில் இருந்து மம்மூட்டி - ஜோதிகா நடித்த ‛காதல் தி கோர்' மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடித்த ‛இரட்டா' ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !