உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 250 படங்களின் வெளியீட்டுச் சாதனையில் 2023

250 படங்களின் வெளியீட்டுச் சாதனையில் 2023

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 92 வருடங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் வெளியான ஆண்டாக இந்த 2023ம் ஆண்டு அமைய உள்ளது.

கடந்த வாரம் வரை தியேட்டர்களில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 230ஐக் கடந்துள்ளது. ஓடிடி, இணையதளம், நேரடியாக டிவியில் வெளியான படங்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளன.

இந்த 2023ம் ஆண்டின் மாதத்தின் கடைசி வெளியீட்டு நாளான டிசம்பர் 29ம் தேதி சுமார் 11 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜெய் விஜயம், மதிமாறன், மூன்றாம் மனிதன், மூத்த குடி, நந்திவர்மன், பேய்க்கு கல்யாணம், ரூட் நம்பர் 17, சரக்கு, வட்டார வழக்கு, யாவரும் நல்லவரே” ஆகிய படங்கள் அன்று வெளியாக உள்ளன. இந்தப் படங்களையும் சேர்த்தால் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 240ஐயும், ஓடிடி படங்களையும் சேர்த்தால் இந்த ஆண்டில் வெளிவந்த மொத்த படங்களின் எண்ணிக்கை 250ஐயும் கடக்கும்.

இத்தனை படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்களின் எண்ணிக்கை 20க்குள் மட்டுமே அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !