ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக் கொடுத்த ஆந்திர முதல்வர்
ADDED : 661 days ago
ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி அங்குள்ள குண்டூரில் ஆடுதம் ஆந்திரா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது தன் அருகில் நின்ற அமைச்சரும் நடிகையுமான ரோஜாவையும் கிரிக்கெட் விளையாட சொன்னதோடு, அவருக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். அதையடுத்து கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்த ரோஜா, முதல் பந்தையே பறக்க விட்டார். அப்போது அவரை அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.