உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் தலைவாசல் விஜய்

மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் தலைவாசல் விஜய்

பிரபல சினிமா நடிகரான தலைவாசல் விஜய் தென்னிந்திய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தவிர சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்துள்ள அவர் கடைசியாக அழகு தொடரில் நடித்தார். அதன்பின் சின்னத்திரையில் தலைக்காட்டாத அவர் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு புதிதாக ஒளிபரப்பாக உள்ள தொடரில் சுகன்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. பொதிகை சேனலில் ஒளிபரப்பாக உள்ள சக்தி ஐபிஎஸ் தொடரில் நாயகியாக சுவாதிகாவும் அவருடன் சுகன்யா மற்றும் தலைவாசல் விஜய்யும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !