உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை கிரிக்கெட் அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா

சென்னை கிரிக்கெட் அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகிறது. இந்த தொடரின் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஐதராபாத் அணியின் உரிமையாளராக நடிகர் ராம் சரணும், மும்பை அணியின் உரிமையாளராக அமிதாப்பச்சனும், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளராக அக்ஷய் குமாரும், பெங்களூர் அணியின் உரிமையாளராக ஹிருத்திக் ரோஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வரிசையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளராக நடிகர் சூர்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஐஎஸ்பிஎல் டி-10 தொடரில் எங்களது சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார் சூர்யா. அதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !