கேப்டன் மில்லருக்கு 'யுஏ'
ADDED : 655 days ago
தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.
இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், விநாயகன் உள்பட பலர் நடித்துள்ளனர். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட கால பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்தனர். ஒரு சில கட்டுகளுடனும், ஒரு சில வசன மியூட்டுடனும் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கி உள்ளனர்.