உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கமகள் சீரியலில் நடிக்கும் யுவன் மயில்சாமி

தங்கமகள் சீரியலில் நடிக்கும் யுவன் மயில்சாமி

மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மயில் சாமி, யுவன் மயில்சாமி ஆகிய இருவரும் சில படங்களில் நடித்துள்ளார்கள். என்றாலும் அவர்கள் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் இன்னும் பிரபலமாக முடியாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் மயில்சாமியின் இளைய மகனான யுவன் மயில்சாமி தற்போது சின்னத்திரைக்கு வந்துள்ளார். விஜய் டிவியில் வெளியாக இருக்கும் தங்க மகள் என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறார். சினிமாவில் எதிர்பார்த்தபடி சரியான வாய்ப்புகள் அமையாததால் யுவன் மயில்சாமி சின்னத்திரைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !