உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜுன் கபூருடன் மலைக்கா அரோரா பிரேக் அப்

அர்ஜுன் கபூருடன் மலைக்கா அரோரா பிரேக் அப்

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான மலைக்கா அரோரா, மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் இடம்பெற்ற தக தைய்ய தைய்ய தைய்யா தைய்யா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இப்படம் ஹிந்தியில் தில் சே என்ற பெயரில் வெளியானது. மேலும், 1998 ஆம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட மலைக்கா அரோராவுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அர்பாஸ்கானை விவாகரத்து பெற்ற அவர், போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா அரோரா 12 வயது அதிகமானவர். இவர்கள் லிவிங் டு கெதராக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற மலைக்கா அரோரா, தற்போது தான் அர்ஜுன் கபூரை பிரிந்து சிங்கிளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !