நேருக்குநேர் மோதும் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்
ADDED : 646 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'அயலான்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதில் அயலான் படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகிறது என அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படமும் ஜனவரி 12ம் தேதி தான் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கூடுதலாக கேப்டன் மில்லர் படத்திற்கு சென்சாரில் யு/ஏ அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் அயலான், கேப்டன் மில்லர் இரு படமும் ஒரே தேதியில் மோதுகிறது.