மக்களின் அன்பு : விஜயகாந்த் மகன் நெகிழ்ச்சி
ADDED : 691 days ago
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் நேற்றுமுன்தினம் மறைந்தார். அரசு மரியாதை உடன் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதுபற்றி விஜயகாந்த்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் வெளியிட்ட பதிவில், ‛‛உங்களின் இதயப்பூர்வமான இரங்கலுக்கு நன்றி. மக்களின் இந்த ஆதரவு, எங்களின் தந்தை எப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார், எவ்வளவு அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. இந்த இழப்பிலிருந்து நாங்கள் மீண்டும் வர இந்த கடுமையான நேரத்தில் உங்களின் இந்த ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை அளிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.