ஆந்திரா, தெலுங்கானாவில் கேப்டன் மில்லர் தள்ளிப் போகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி
ADDED : 646 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் என இரு முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகவில்லை என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் குண்டூர் காரம், ஈகிள், சைந்தவ், ஹனுமன், நா சாமி ரங்கா போன்ற தெலுங்கு படங்கள் வெளியாகுவதால் மற்ற மொழி படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என்பதால் கேப்டன் மில்லர் படத்தின் தெலுங்கு பதிப்பு ஒரு சில வாரங்கள் கழித்து வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.