பிரபாஸூடன் இணைந்து நடிக்கும் அம்மு அபிராமி
ADDED : 647 days ago
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் புதிய படத்தில் நடிக்கின்றார். இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து முக்கிய அறிவிப்பு வருகின்ற பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் கதாபாத்திரத்தில் தமிழிலிருந்து யோகி பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அம்மு அபிராமி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் அசுரன், யானை, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.