பீட்சா 4ல் ஹீரோவாக நடிக்கும் நாசர் மகன்
ADDED : 647 days ago
கடந்த 2012ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் 'பீட்சா'. வித்தியாசமான ஹாரர் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பீட்சா 2,3 பாகங்கள் வெளிவந்து சுமாரான வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் 'பீட்சா 4'ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் திட்டமிட்டுள்ளார். இந்த பாகத்தை சூது கவ்வும் 2ம் பாக இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதி, இயக்குகிறார். இதில் ஹீரோவாக நாசரின் மகன் அபி ஹாசன் நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு கடாரம் கொண்டான், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்தவர். இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெறவுள்ளது .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.