மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
618 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
618 days ago
கடந்த 17, 18ம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளார்கள். இதையடுத்து தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் நேற்று 1000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் விஜய். அப்போது சிலர் நிவாரண பொருளை விட விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்டாலே போதும் என்றும் படையெடுத்துள்ளனர்.
இப்படியான நிலையில், நிவாரண பொருட்களை வழங்கிய விஜய், அங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
618 days ago
618 days ago