வாட்டர் பேபியான மனிஷா யாதவ்!
ADDED : 617 days ago
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதையடுத்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பின்னர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து விலகிவிட்டார்.
என்றாலும் இன்ஸ்டாகிராமில் அவ்வபோது தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் புத்தாண்டு நாளை பிறக்க இருப்பதை அடுத்து, 2023ம் ஆண்டில் கடற்கரை மற்றும் அருவிகளில் தான் நீராடி மகிழ்ந்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் மனிஷா யாதவ்.