கபில் தேவுடன் போட்டோ எடுத்த தீப்தி கபில்
ADDED : 647 days ago
சின்னத்திரை நடிகையாக மக்களுக்கு பரிட்சயமானவர் நடிகை தீப்தி. இவரது கணவர் பெயர் கபில் சேகர் என்பதால் தீப்தி கபில் என்றே சோஷியல் மீடியாக்களில் அறியப்படுகிறகிறார். அவருக்கு கபில் என்று ஏன் பெயர் வந்தது என பலரும் கேட்டு வந்த நிலையில், தற்போது அந்த சீக்ரெட் உடைந்துள்ளது. தீப்தியின் கணவரான கபில் சேகரின் பெற்றோர் பிரபல கிரிக்கெட்டரான கபில் தேவ் உடைய தீவிர ரசிகர்களாம். அவர் மீதிருந்த பற்றின் காரணமாக தான் சேகருக்கு கபில் என்ற பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது தீப்தி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கபில் தேவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர் கபில் என்ற பெயருக்கான இந்த சீக்ரெட்டையும் பகிர்ந்துள்ளார்.