உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி

ரசிகர்களை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள், பண்டிகை மற்றும் முக்கிய விஷேச தினங்களில் தனது வீட்டின் முன்பு கூடும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். அந்த வகையில் 2024, ஆங்கில புத்தாண்டு பிறந்த தினமான இன்று(ஜன., 1) ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள் முன்பு தோன்றிய ரஜினி அவர்களை வாழ்த்தினார். மற்றும் நன்றியும் தெரிவித்தார். ரஜினி பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் தலைவா... தலைவா... என கூச்சலிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !