சிறிய படங்களுடன் ஆரம்பமாகும் 2024 வெளியீடுகள்
ADDED : 644 days ago
2023ம் ஆண்டில் 240 தமிழ்ப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத அளவிற்கு அதிகமான படங்கள் வெளியான ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்தது. அது போலவே இந்த 2024ம் ஆண்டும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமை ஜனவரி 5ம் தேதி வருகிறது. அன்றைய தினம் சில சிறிய படங்கள் வெளியாக உள்ளன. “அரணம், எங்க வீட்ல பார்ட்டி, கும்பாரி, உசுரே நீ தாண்டி,” ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கடுத்த வாரம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி 'அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட 'லால் சலாம், அரண்மனை 4' படங்களின் வெளியீடு குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வரவில்லை.