வெற்றி படத்தில் 2 ஹீரோயின்கள்
ADDED : 644 days ago
அமெரிக்காவில் வசிக்கும் ஆவணப் பட இயக்குனர் நரேந்திர மூர்த்தி தற்போது தமிழில் படம் ஒன்றை இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிராத்தனா, ஐரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.