தவறாக தொட எப்படி அவனுக்கு தைரியம் வந்தது? - ஐஸ்வர்யா ரகுபதி சீற்றம்
ADDED : 645 days ago
கேப்டன் மில்லர் பட விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி, வாலிபர் ஒருவரை காலில் விழ வைத்து அடித்து துவைத்த வீடியோ பயங்கரமாக வைரலானது. அதுகுறித்து தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், 'அந்த கூட்டத்தில் என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டான். உடனடியாக அவனை பிடித்து அடிக்க ஆரம்பித்தேன். அவனை ஓடவிடாமல் பிடித்துக் கொண்டேன். ஒரு பெண்ணின் அங்கத்தை பிடிக்க எப்படி அவனுக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் கத்தி அவனை தாக்கினேன். என்னை சுற்றி பல நல்ல மனிதர்கள் இருந்தார்கள். இந்த உலகில் நம்மை சுற்றி பல அன்பான மரியாதையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நம்ம சுற்றி இருக்கும் இதுபோன்ற சில மிருகங்களால் தான் எனக்கு அச்ச உணர்வு உண்டாகிறது' என்று பதிவிட்டுள்ளார்.