விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொன்ன சிவகுமார், சூர்யா, கார்த்தி : கலங்கிய சூர்யா
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்தனர். வருட இறுதி நாட்கள், புத்தாண்டு என குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்கள். அதனால், வர இயலவில்லை என்ற தகவல் வெளியானது.
பத்திரிகையாளர்களிடம் அழுது கொண்டே பேசுகையில் விஜயகாந்துடன் இணைந்து 'பெரியண்ணா' படத்தில் நடித்த நாட்களை நினைவு கூர்ந்தார். ‛‛அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தாலும் எப்போதும் அவரின் நினைவு இருக்கும்'' என்றார்.
அதன்பின்பு சூர்யா, கார்த்தி அவர்களது அப்பா சிவக்குமார் ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அங்கு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.