உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசனம் இல்லாமல் வெளிவந்த ரசவாதி பட டீசர்

வசனம் இல்லாமல் வெளிவந்த ரசவாதி பட டீசர்

மௌன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் கடந்த சில வருடங்களாக நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து 'ரசவாதி' எனும் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். தன்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்பிரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இந்த படத்தின் டீசர் வெளியானது. வழக்கமான சாந்தகுமார் படங்களை போல ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உள்ளது. மேலும், தமனின் பின்னனி இசையில் வசனமே இல்லாமல் இந்த டீசர் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !