மேலும் செய்திகள்
மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது!
616 days ago
ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி!
616 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அந்த படத்தில் விஜய்யின் நடிப்பு குறித்து விமர்சித்து பேசியதாலும் நெல்சன் தனது கதாபாத்திரத்தை வீணடித்து விட்டதாகவும் கூறி படம் வெளியான சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு கடந்த வருடம் நானி நடிப்பில் வெளியான தசரா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இந்த நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குனர் கமல் இயக்கத்தில் உருவாகி உள்ள 'விவேகானந்தன் வைரலானு' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
படத்தில் கிரேஸ் ஆண்டனி மற்றும் சுவாசிகா விஜய் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த இரண்டு கதாநாயகிகளிடமும் மாட்டிக்கொண்டு நாயகன் படும் அவஸ்தை தான் இந்த படத்தின் கதை. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் தன்னிடமுள்ள நகைச்சுவை திறமையையும் ஷைன் டாம் சாக்கோ வெளிப்படுத்தி உள்ளாராம்.
616 days ago
616 days ago