டாக்ஸிக் படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் கரீனா கபூர்!
ADDED : 669 days ago
கேஜிஎப்-2 படத்தை அடுத்து கீது மோகன்தாஸ் இயக்கும் 'டாக்ஸிக்' என்ற படத்தில் நடிக்கிறார் கன்னட நடிகர் யஷ். இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கரீனா கபூரிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் யஷ்க்கு தற்போது 37 வயதாகும் நிலையில், கரீனா கபூருக்கு 43 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார் கரீனா கபூர். மேலும், இதற்கு முன்பு யஷ் நடித்த கே ஜி எப்- 2 படத்தில் அவருக்கு ஜோடியாக இன்னொரு பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.