ரஜினியின் வேட்டையன் படத்தில் குத்து பாட்டுக்கு நடனமாடும் துஷாரா விஜயன்!
ADDED : 695 days ago
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தில் அவரது மகளாக நடித்து வருகிறார். அதோடு, அமிதாப் பச்சன் பகத் பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வேட்டையன் படத்திலும் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடலைப் போன்று ஒரு பாடல் இடம்பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தில் தமன்னா அந்தப் பாட்டுக்கு நடனமாடிய நிலையில், வேட்டையன் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு துஷாரா விஜயன் நடனம் ஆடுகிறார். இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.