உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்று நடந்த 'தெறி' ஹிந்தி ரீமேக் பூஜை

இன்று நடந்த 'தெறி' ஹிந்தி ரீமேக் பூஜை

அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'தெறி'. இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இன்று படத்தின் பூஜையை நடத்தி அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார்கள்.

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். காளீஸ்வரன் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனைவரும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டனர். படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் 'ரகு தாத்தா' டீசரில் 'ஹிந்தி தெரியாது போய்யா' என்று வசனம் பேசியிருந்தார். இன்று ஹிந்திப் படத்தில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் பூஜை நடந்துள்ளது. அங்கு சென்று ஹிந்தி தெரியாது என சொல்ல மாட்டார், ஹிந்தியில்தான் பேசியிருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !