அயோத்தியில் ரூ.14.5 கோடிக்கு பிளாட் வாங்கிய அமிதாப் பச்சன்
ADDED : 631 days ago
உலகமே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன., 22ல் பிரமாண்டமாய் நடக்கிறது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் முதல் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பின் அந்த ஊரும் வேகமாக வளர்ந்து வருகிறது. வர்த்தக ரீதியாகவும் தொழில் நகரகமாக மாறி வருகிறது. இதனால் முதலீடுகளும் அதிகமாகி வருகின்றன. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனை வாங்கி உள்ளாராம். இதன் மதிப்பு ரூ.14.50 கோடி என்கிறார்கள்.