மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
625 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
625 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
625 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
625 days ago
2024 பொங்கலுக்கு தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்', விஜய் சேதுபதி நடித்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்', அருண் விஜய் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்கள் ஜனவரி 12ம் தேதியன்று வெளியாகின.
இப்படங்கள் அனைத்தும் வெளியாகி ஐந்து நாட்கள் முடிந்துள்ள நிலையில், 'அயலான்' படத்தின் நான்கு நாள் உலக வசூல் 50 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். மற்ற படங்களின் வசூல் விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 'கேப்டன் மில்லர்' படத்தின் வசூலும் 50 கோடியைத் தொட்டிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தை ஒரு நேரடித் தமிழ்ப் படம் என மக்களிடம் கொண்டு போய் சரியாகச் சேர்க்கவில்லை. ஹிந்தியில் படத்திற்கு விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'மிஷன் சாப்டர் 1' படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அதிகமான தியேட்டர்கள் கிடைக்காதது படத்திற்கான வசூலைக் குறைத்துள்ளதாம்.
இன்றுடன் பொங்கல் விடுமுறை நாட்கள் முடிவுக்கு வருகிறது. படம் வெளியாகி இன்றுடன் முடியும் ஆறு நாட்களில் தியேட்டர்களில் அதிக ரசிகர்களை வரவழைத்த படங்களில் 'அயலான்' படம் முந்தியிருக்கிறது என்பது தியேட்டர் வட்டாரத் தகவல். குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்து ரசிக்கிறார்களாம். 'கேப்டன் மில்லர்' படத்திற்கு குடும்ப ரசிகர்களின் வருகை குறைவாகவே இருக்கிறதாம். இருப்பினும் இந்த வார இறுதி வரை பொங்கல் படங்களுக்கான ரசிகர்களின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அயலான்' படத்தின் தியேட்டர் உரிமை 'கேப்டன் மில்லர்' படத்தின் உரிமையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம். அதனால், 'அயலான்' படம் 100 கோடி வசூலைக் கடந்த பிறகுதான் அதற்கான பங்குத் தொகை, லாபம் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் என்கிறார்கள். அதே சமயம் அதே 100 கோடி வசூலை 'கேப்டன் மில்லர்' படம் கடந்தால் அப்படம் லாபத்தைத் தரும் படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
மொத்தமாக தியேட்டர் ஓட்டம் முடிந்த பிறகே எந்தப் படம் லாபத்தைக் கொடுத்தது என்பது தெரிய வரும். அதுவரை வரும் வசூல் அறிவிப்புகள் அந்தந்த நடிகர்களின் ரசிகர்களைத் திருப்திப்படுத்த மட்டுமே அமையும்.
625 days ago
625 days ago
625 days ago
625 days ago