உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் கணவருக்கு லிப் கிஸ் தந்து வாழ்த்திய கியாரா அத்வானி

பிறந்தநாளில் கணவருக்கு லிப் கிஸ் தந்து வாழ்த்திய கியாரா அத்வானி

இந்தியன் 2 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். ராம்சரண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷெர்ஷா என்ற ஹிந்தி படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஆகிய இருவரும் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு, கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஜனவரி 16-ம் தேதியான நேற்று தனது கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா பிறந்தநாள் கொண்டாடியபோது அவருக்கு உதட்டு முத்தம் கொடுத்து அன்பை பகிர்ந்துள்ளார் கியாரா அத்வானி. அதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !