மலர் சீரியலில் இனி இவர் தான் ஹீரோ
ADDED : 680 days ago
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் அக்னி ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சீரியலிலிருந்து விலகுவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அர்ஜுன் கதாபாத்திரத்தில் இனி யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. இந்நிலையில், திருமகள் தொடரில் ஹீரோவாக நடித்த சுரேந்தர் தான் இனி மலர் சீரியலிலும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.