தல பொங்கலை கொண்டாடிய வைரல் ஜோடி
ADDED : 629 days ago
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. அதேபோல் திரைப்படம் மற்றும் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை சங்கீதா. இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து சோஷியல் மீடியாக்களில் வைரல் ஜோடியாக வலம் வந்த ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதியினருக்கு லைக்ஸ்களும் வாழ்த்துகளும் குவிந்தது. இந்நிலையில், தங்களது தல பொங்கல் செலிபிரேஷனை கணவருடன் சந்தோஷமாக கொண்டாடிய சங்கீதா அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் பலரும் பொங்கல் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.