சிறகடிக்க ஆசை தொடரில் என்ட்ரி கொடுத்த ஜெயமணி
ADDED : 649 days ago
திருமதி செல்வம் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெயமணி. தொடர்ந்து பல தொடர்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பூங்காவனம் என்கிற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கி பெயர் வாங்கிய ஜெயமணி, தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரில் காமெடி ரோலில் நடிக்கிறார். கறிக்கடைக்காரராக என்ட்ரியாகி நடித்து வரும் ஜெயமணிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.