திருமணத்தால் திறமை போய்விடாது - பாவனா
ADDED : 636 days ago
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் பாவனா. தமிழில் ‛சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இடையில் அவர் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் நடிப்பை விட்டு ஒதுங்கினார். பின் அதிலிருந்து மீண்டவர் 2018ல் நவீன் என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛15 வயதில் நடிகையானேன். திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நினைத்தேன். திருமணத்தால் ஒருவரின் திறமை போய்விடாது. இதற்காக ஏன் நடிப்பை நிறுத்த வேண்டும்'' என்கிறார்.