தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் இளம் கன்னட நடிகை
ADDED : 670 days ago
கன்னடத்தில் வெளிவந்த 'சப்த சகரடச்சி எலோ' என்கிற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் ருக்மணி வசந்த் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனுதீப் இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் இதில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இது அல்லாமல் சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.