கதையின் நாயகியாக நடிக்கும் அதிதி ஷங்கர்
ADDED : 627 days ago
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. தமிழில் கார்த்தி நடித்த ‛விருமன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‛மாவீரன்' படத்தில் நடித்தார். அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அடுத்து சூர்யாவின் 43வது படத்திலும் நடிக்க போவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதல் முறையாக ஒரு படத்தில் கதையின் நாயகியாக அதிதி நடிக்கவுள்ளார். இதை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்த படத்தின் கதை முதலில் நயன்தாரா, சாய் பல்லவி போன்ற நடிகைகளிடம் சென்று இப்போது அதிதி ஷங்கரிடம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.