உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பான் இந்திய ரிலீஸை தவிர்த்த மலைக்கோட்டை வாலிபன்

பான் இந்திய ரிலீஸை தவிர்த்த மலைக்கோட்டை வாலிபன்

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் இன்று (ஜன-25) ரிலீஸாகி உள்ளது. கடந்த வருட இறுதியில் மோகன்லால் நடிப்பில் வெளியான நேர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இதனால் இந்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தை பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. 25ம் தேதி ஒரே நாளில் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் இந்த படம் வெளியாகும் என அறிவிப்பும் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த படம் மலையாளத்தில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இது மற்ற மொழிகளில் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதே சமயம் ஹிந்தி உள்ளிட்ட மற்ற நான்கு மொழிகளில் இந்த படத்தை வரும் பிப்ரவரி-2ம் தேதி ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார் என்று தகவலும் வெளியாகி உள்ளது. இன்றே மற்ற மொழிகளிலும் இந்த படம் வெளியாகி இருந்தால் மோகன்லால் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்திய படமாக இது அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !